வாழ்வில் எதுவும் வசப்படக் கூடும்
..வழியை வகுத்திடு மனமே!
தாழ்வும் உயர்வும் சமமென ஏற்கும்
..தகவை உணர்ந்திடு உளமே!
காழ்ப்பை விடுத்துக் கருணையில் ஆழ்ந்து
..கருத்தில் பக்குவ நிலைகொள்!
சூழும் வினையாம் சுழல்தனை நீக்கும்
..சுகமாம் இறையருள் துணையே!
வயசு கோளாறு
1 year ago
1 comment:
அம்மா..
இறையருள் இல்லையேல்..
இல்லறம் ஏதென்று..
இயல்பாய் சொன்ன கவி அருமை
அன்புடன்
அகிலா
Post a Comment