மனதை ஈர்த்து மகிழும் காட்சி
...மாந்தக் கோடி கண்களாம்!
கனவோ? மெய்யோ? களிக்கும் உள்ளம்
...கவிதைப் பொங்கச் செய்திடும்!
நினைவில் பசுமை காவியம்!
...நிகரில் லாத ஓவியம்!
வனங்கள்,தருக்கள்,மலைநீர் வீழ்ச்சி
...வளமை கூட்டும் இயற்கையே!
பிழைசரிசெய்து இட்டேன்.
வயசு கோளாறு
1 year ago
1 comment:
இக்கவிதை "இடைமுடை விருத்தம்"
என்னும் வகையில் அமைந்த எழுசீர் விருத்தம்.
இதன் விளக்கத்தை கவிமாமணி.இலந்தை அவர்கள்
சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, இக்கவிதை
ஒரே விகற்பத்தில் அமைந்திருக்கும்.
மூன்றாம் அடியில் இயைபு அமைந்து,
அறுசீர்கள் பெற்று வரும்.
இந்த மூன்றாம் அடி இடையில் செருகப்பட்டுள்ளது
எனவே'இடைமுடை விருத்தம்'என்ப்படுகிறது.
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment