Friday, November 14, 2008

வெண்பா

பொதுவாகும் மேடை புரிந்தாடும் கூத்தும்
அதிலாடும் யாவும் அவனால்!--எதுவும்
விதியாகிக் காட்டும் வினைதீரச் செய்யும்
மதிசூடி பூந்தாள் மலர்ந்து.

3 comments:

Anonymous said...

நதிசூடி நாளும் நமைப்புரக்கும் செம்மை
மதிசூடி பூந்தாள் மலர்ந்து.

Thangamani said...

திரு.நம்பி அவர்களுக்கு,
அழகான குறள்வெண்பா தந்தீர்!நன்றி!

நதிசூடி நாளும் நமைப்புரக்கும் செம்மை
மதிசூடி பூந்தாள் மலர்ந்து.

(ஒரு சந்தேகம்!
செம்மை மதி என்றால்,இந்தமதி செம்மைமதி அல்லவே!
பிறைமதியன்றோ?)
நதி,மதிசூடியின்,செம்மை பூந்தாள் மலர்ந்து
நாளும் நமைப்புரக்கும் என்றுகொள்ளலாம்.
சரியா?

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

நதிசூடியும் மதிசூடியுமாகிய எம்மான் சிவபெருமான்; அவன்தன் இணையடி செம்மைக்கு இலக்கணம். அத்தகு திருவடிகள் நாளும் நம்மைப் புரக்கும்.

//நதி,மதிசூடியின்,செம்மை பூந்தாள் மலர்ந்து
நாளும் நமைப்புரக்கும் என்றுகொள்ளலாம்.
சரியா?//

மிக மிகச் சரியாகப் பொருள்கொண்டுள்ளீர்கள்; உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.