Sunday, November 2, 2008

"காரம் இனித்திடுமே காண்."

வெண்பாவின் ஈற்றடி:

"காரம் இனித்திடுமே காண்."

சிந்தை குடிகொண்ட சிங்கார வேலவனை
வந்தனை செய்து வணங்கிடுவாய்! -- சந்ததமும்
வீரவேல் சக்திநிறை வெற்றியினில் கந்தரலங்
காரம் இனித்திடுமே காண்.

4 comments:

dhileep said...

சபாஷ்! நல்ல யுக்தி அம்மா!
உன் வார்த்தை ஜாலமும் சொல்லலங்காரமும் மிகவும் சுவை யானது!
தொடர்க உன் தமிழ்ப் பயணம்!
திப்பிலி.

dhileep said...

எனக்கு வெண்பா எழுத ஆசை; ஆனால் வெண்பா தயாரிக்க (அ)'செய்ய' உடன்பாடில்லை.எனினும் அவசர முயற்சியில் தயாரித்தது- 5 நிமிடத்தில்.தவறை சரி செய்யவும்.

பாரம் அகன்றுவிடும் பல் வினையும் ஒடிவிடும்
ஆரம்பமும் நன்கு அமைந்து விடும்- பாரதினில்
ஆரும் விரும்பியேகும் ஆண்டாள் நகையலங்
காரம் இனித்திடுமே காண்

Thangamani said...

திருத்தி இட்டேன்.பார்!
தளை தட்டாத வெண்பா இதோ!

மா முன்நிரை,காய் முன் நேர் அமைந்து,
வெண்சீர் வெண்டளைகள் பெற்ற வெண்பா!
பாராட்டுகள்! வாழ்த்துகள்!பாராட்டுக்கென் நன்றி!
எங்கள் ஆசான் திரு. இலந்தை அளித்த ஈற்றடி இது!

அன்புஅம்மா,
தங்கமணி.

பாரம் அகன்றுவிடும் பல்வினையும் ஓடிவிடும்
ஆரம்பம் நன்கு அமைந்துவிடும்- பாரதினில்
ஆரும் விரும்பிடும் ஆண்டாள் நகையலங்
காரம் இனித்திடுமே காண்

அன்பு திலீப்!அருமை!அருமை!
ஐந்தே நிமிஷத்தில் எழுதியதற்கென் பாராட்டுக்கள்!

Uma said...

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ப

தி
னாறு அடி பாய்கிறதே!
uma.