ஊட்டி மலையில் விரைவுவண்டி
...ஊர்ந்து வளைவில் தொடர்கிறது!
வாட்டும் குளிரில் மழலையுடன்
...மங்கை ஒருத்தித் தவிப்பினிலே!
சாட்டும் வறுமை தெரிகிறது!
...சால்வை கொடுத்துக் குளிர்குறைத்தேன்
காட்டும் விழிநீர் அவள்நிலையை;
...கரங்கள் குவித்தாள்! இறைநினைந்தேன்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
swஏழைப் பெண்ணுக்குத் தன் மேலாடையை ஆற்றில் விட்ட காந்தியின் கருணைக்கு
சற்றும் குறைந்ததல்ல உன் செயல்.
கொடியில் காய்ந்து கொண்டிருந்த புடவையை உருவி ஏழைக்குக் கொடுத்த
ராஜம்மாவின் பெண்ணல்லவா விசாலாக்ஷி[பரந்த நோக்கமுடையவள்]
அனானிமஸ்!,
தங்கமணியின் இன்னொரு பெயர்
விசாலாட்சி என்பதை சொல்லிவிட்டாய்!
நான் ஒன்றுக்கும் ஆகாதத் தூசு,
ஆனாலும்,இறைவனை,பெரியோரை,இயற்கையை
நினைக்கும் மனம் வேண்டி வாழ்கின்றேன்!
மஹான் காந்திக்கு நிகர் அவரே!!!
எப்பேர்ப்பட்ட தியாகி அவர்!அவர் பெயரைச் சொன்னாலே
புண்ணியம்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment