உனதருள் பேறு!
பித்தா! என்றிடின் பெரிதுவந்(து)இறைவ!நீ
...பீடாய் தோழமை கொண்டாய்!
அத்தா! உன்றனின் அடிதொழ மறக்கிலேன்
...அன்பும் கருணையும் தாராய்!
நித்தா! நிர்மலா! நிதமுனை வேண்டினேன்
...நெஞ்சில் அமைதியை வைப்பாய்!
மத்தாய் சுழலுறும் மனிதரின் வாழ்விலே
...மங்கா துனதருள் பேறாம்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
பாடல் நன்று; மகிழ்ச்சி; தொடர்ந்து எழுதுங்கள்.
பாராட்டுக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment