விடிந்தும் விடியாத
அதிகாலை திரிசங்கில்
எந்த விடியலுக்காய்
இவை இப்படிக் கூவுகின்றன?
வாலது விரிய
கொண்டை சரிய
குரல் கிழிய
கசாப்புக் கடையின்
கம்பிக் கூண்டிலிருந்து...
மானுட வல்லமையின்
போலி நிரூபணங்களாய்
எட்டு மணிக்கு
இறக்கைக் குவியலாகவா?
திப்பிலி
வயசு கோளாறு
1 year ago
2 comments:
கோழிக் கூவும்!பொழுது விடியும்!
எந்த விடியலூக்காய் கூவுகின்றன?இந்தக்
(கசாப்புக் கடைக் கூண்டிலிருந்து)
கோழிகள்?"வாலது விரிய,கொண்டை சரிய,குரல் கிழிய,கத்தும்
கோழிகளின் ஒன்றுமறியாப் பேதமையைக் கண்டு மனசு
உருகுகின்றது!
திலீப் !அருமையான கவிதை!சொல்ல வார்த்தைகள் இல்லை!
பாராட்டுகள்!
ஒவ்வொரு முறையும் கசாப்பு கடை தாண்டும்பொதும் தோன்றும் எண்ணம்.
நீ கவிதை யாக பாடிவிட்டாய்!!
மிக்க நன்று,மகனே!!
இன்னும் நிறைய எழுது,படிக்க காத்திருக்கிறேன்.
Post a Comment