மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
நிழல்கள் ஒன்றை ஒன்று ஒளியது ஒன்றை ஒன்று
பெரியது சிறிதை மற்றும் சிறியதே சிறிதாய் பெரிதை,
உறவுகள் ஒன்றை ஒன்று அறிவது ஒன்றை ஒன்று
பணமது குணத்தை என்று பிணமது ஆகும் வரையில்
மறைத்தலே மனிதர் தத்துவம்.
காற்றினில் ஏறி என்றும் கற்பனைக் குதிரை ஓட்டி
கனவிலே இன்பம் கண்டு கண்ணிலே பொய்மை பேசும்.
பொய்யது கண்டு கொண்டால் வாயது இளித்து நிற்கும்
பாசாங்கு செய்தல் என்றால் பல்லது இளித்து காட்டும்
மாற்றமா மனிதம் ? என்றும் மறைத்தலே மனிதம்.
விலங்குகள் மறைத்தல் அறியா.
கோபமோ கண்கள் காட்டும்; ஆத்திரம் வாயில் வடியும்
காதலோ இதயம் காட்டும் இன்பமோ உடம்பே சொல்லும்
மாக்கள் மனிதம் ஆகா; மறைத்தலை மாக்கள் அறியா.
உணர்ச்சிகள் திரையில் அடங்கா; உண்மைகள் கரைக்குள் அடங்கா.
வெளிப்பாடு என்றும் எதற்கும்;வடிந்தது மனமென்றாகும்.
ஆனால் மறைத்தலே மனிதம்.
பூட்டிய உணர்வே பின்னாள் விஷமாகும் என்றான் நீட்ஷெ.
உண்மையும் விஷமும் அறிவோம்; அனைத்தையும் பூட்டி வைப்போம்!
சங்கிலி இடுவோம் நமக்கே; சட்டிக்குள் சுற்றும் குதிரை!
பொங்கிட ஆசை கொள்ளும் மனமதை மறைத்து காப்போம்.
கோபமும் க்ரோதம் வேட்கை, குமைந்திடும் ஆசை மோகம்,
ஏளனம் கண்கள் சொல்லும் இகழ்ச்சியும் வெறுப்பு மற்றும்
துன்பமும் சோகம் வருத்தம், துவண்டிடும் சோர்வு தளர்ச்சி
நாணமும் மருட்சி வெட்கம், நால் வகை குணமுமென்று
அனத்தையும் மறைத்து வைப்போம்.மறைத்தலால் மனிதராவோம்!
மாற்றமா வாழ்க்கை? இல்லை மறைத்தலே மனித வாழ்க்கை!
மறைப்பதால் மாற்றலாகி மாற்றமும் மாறி மாறி....
மறைத்தலே மனிதர் தத்துவம்!
மறைந்தவர் சொல்லிச்சென்றார் மாற்றமே மனிதமென்று,
மாற்றமே தத்வமென்றால் தத்துவம் மாறுவதென்றோ !
திப்பிலி
(இருட்டு பாதையில் நீள இரவில் ஒரு நாள் நடக்க நேரிட்ட போது தோன்றிய எண்ணக் குழப்பங்கள் கவிதையானது- 1989)
வயசு கோளாறு
1 year ago
4 comments:
Dhileepa
I am seeing a Viswaroobam of thoughts! Record further..!
This blog's purpose is fulfilled.
BTW, where's the kavidhai on "Karuppu" ( or Iruttu) which you shown me decades ago.
Lovingly
Kumar
கண்ணே!திப்பிலிராஜா!மகனே!
இந்தக் கவிதைகளில், ஒரு சிறப்பும்,மகத்துவமும்
இருக்கு! உன்னுடைய இருபதுகளில் நீ எழுதியது
என்பதை நினைக்க எனக்கு பிரம்மிப்பாக இருக்கு!
நீ எழுதினதையெல்லாம் சொன்னதே இல்லே!
உனக்குள்ளே ஒரு சித்தரிஸமான,ஞானநிலை பொதிந்த
தத்துவங்கள் விஸ்வரூபமாக,கவிதையாக வெளியிட்டுள்ளாய்!
வாழ்க!பாராட்டுகள்!
அன்புஅம்மா,
தங்கமணி.
Dhilip,
Unnudaiya 20in kavidhaigalai
Inru engaludan pagirndhu kolgirai.
Idhai purindhu kollun pakkuvam
engaluku ippodhu dhan vandhu
irukum enru ninaithayo??
Ippodhu irukum un nilaiyai engaluku
solla maatai.
Enravadhu andha nilaiku nangal varuvom.
Appodhu neeyum solvai ena ninaikiren.
Andha nilaium naalum seekiram vara vendi kolgiren Dhilip.
With Love,
Usha Sankar.
லா.ச.ரா,கவிதை எழுதின மாதிரி இருக்கு.
உன் கவிதை எனக்கு அச்சமளிக்கிறது.
நீ எங்கள் திலீப் இல்லயா?
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
ஒரு சட்டிக்குள் சுற்றும் குதிரை....இல்லை கழுதை
{பி.கு: இலக்கண தவறுகள் இன்றி எழுதவும்}
Post a Comment