தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்;
எரிதவழ் கானில் புரிநட மேற்றும்
...இறையடி யார்கள் மறையெனப் பாக்கள்
வரிசையில் தேனார் பரிசினில் தந்த
...வகையினை ஓர்ந்தே அகமகிழ் வோடு
சொரியருள் தேவைப் பரிவுடன் எண்ணி
...துதிபுகழ்ப் பாடி கதிநினை நெஞ்சே.
தரிசு= உபயோகமில்லாத நிலம்
வயசு கோளாறு
1 year ago
1 comment:
தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்; //
அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் அம்மா.
Post a Comment