சுட்டெரி ஒளிவீழ் விட்டிலின் நிலையில்
...துக்கமாம் மயலில் சிக்கிடும் மனமே!
கட்டெனும் வினையில் பட்டுழல் வதுமேன்?
...காத்திடு மிறைவன் பார்த்தருள் புரிவான்!
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே!
மொட்டவிழ் மலர்கள் இட்டவன் பதத்தை
...முன்னிட தருவான் இன்னருள் தனையே.
முன்னுதல்=கருதுதல்
வயசு கோளாறு
10 months ago
3 comments:
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே! //
ரசனை மிகுந்த வரிகள். கூத்தனின் நடனம் கண் முன்னே வரும் வண்ணம் உணர்வுகளோடு வந்திருக்கின்றன.
அழகானக் கருத்துக்கு மிக்கநன்றி கீதா!
(காலம் கடந்த நன்றியை ஏற்றுக் கொள்ளவும்)
அன்புடன்,
தங்கமணி.
நானும் நிறையப் படிக்க வச்சிருக்கேன். இன்னும் சில நாட்கள் போனதும் வந்து படிக்கிறேன். :D
Post a Comment