புனைசடை தன்னில் புனைமலர் சூடி
...புடையுமை பங்கன் நடமதைச் செய்யும்
கனைகழல் வேண்டின் வினைதனை மாய்க்கும்
...கருணைசெய் தெய்வம் குருவவன் போற்று!
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...திருவருள் தன்னைத் தருமவன் அன்பில்
நனைபவர் தாமே தனமுடைச் செல்வர்?
...நலம்தரும் நாமம் வலம்தரும் நெஞ்சே.
புனைமலர் = புன்னைமலர் (இடைக்குறை)
வயசு கோளாறு
10 months ago
2 comments:
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...திருவருள் தன்னைத் தருமவன் அன்பில் //
உண்மைதான், தினை அளவேனும்தான் நினைக்கிறேன். அதுக்கே இவ்வளவு திருவருள் என்றால் எப்போவும் நினைச்சால் எத்தனை கிடைக்கும்?? நன்றி அம்மா.
புடையுமை பங்கன்= இதிலே புடை என்பது இங்கே என்ன பொருளில் வரும்?? யோசித்தேன், புரியலை! :(
Post a Comment