கன்றினுக் கெனவே மன்றினில் நியாயம்
...காத்திடு மனுவைக் காத்திடும் இறைவன்
கொன்றையம் மலரை பொன்முடி அணிந்து
...கொண்டிடும் தயையில் தொண்டனுக் கருள்வான்
ஒன்றவன் தழலாய் நின்றவன் உமையின்
...உற்றவன் மதனைச் செற்றவன் பதத்தை
நன்றென மனதில் என்றுமே நினைத்து
...நஞ்சுடை மிடறன் நெஞ்சுறு மனமே!
வயசு கோளாறு
1 year ago
4 comments:
can u plz mentioned that meaning also
.its usefull to all
love& grace
மநுநீதிச் சோழன் கதையை நினைவில் கொண்டு வந்தீர்கள் அம்மா. நல்ல பாடல்.
உங்கள் கருத்திற்கு நன்றி!
விளக்கம் எழுத முயல்கிறேன்.
//singam said...
can u plz mentioned that meaning also
.its usefull to all
love& grace//
அன்பு கீதா,
உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி!
Post a Comment