Friday, December 26, 2008

பாரதிநீ!



சக்திச் சுடரொளிநீ!சத்துவத்தின் சாட்சியும்நீ!
பக்திக் கடலொலிநீ!பாரதிநீ!-- திக்கின்றி
திண்டாடும் பாரதத்தைத் தேசுமிகு பாக்கனலால்
பண்பாடி ஊக்கியதுன் பாங்கு

4 comments:

சிக்கிமுக்கி said...

நல்ல வெண்பா!

ஆனால் -
நான்கு வரிகளுக்குள் -
ஆறு அயற்சொற்கள்!

(சக்தி, சத்துவம், சாட்சி, பக்தி, திக்கு, தேசு)

உறுத்துகிறதே!

jeevagv said...

//ஆறு அயற்சொற்கள்!...உறுத்துகிறதே!..//

தாய்ச்சொற்கள் அகமென்றால்
அயற்சொற்கள் புறம்.

அகமும் புறமும் இணைந்ததே அழகு,
இதில் அரற்ற ஏதுமில்லை,
அறிவீர் காண்.

Thangamani said...

சிக்கிமுக்கி!
உங்கள் பாராட்டுதலுக்கு என்மனமார்ந்த நன்றி!
புழக்கத்தில் இருக்கும் எவரும் எளிதாகப்
புரிந்து கொள்ளக்கூடிய சொற்களை
அப்படியே ஆள்வதில் தவறொன்றுமில்லை!
இது என் எண்ணம்!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

ஜீவா!
உங்கள் கருத்துக்கு என்நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!
அகம்,புறம் தேவை வாழ்வுக்கு!
(இன்றியமையாதத் தமிழ்படுத்தியப்)
புறச் சொற்கள் தேவை தமிழுக்கு!

மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.