Monday, December 29, 2008

"சாயம் வெளுத்த சரக்கு"

வெண்பாவின் ஈற்றடி"சாயம் வெளுத்த சரக்கு"

சித்தருடன் ஞானியரும் சிந்தித்துச் சொன்னவை
சித்திபெறும் மெய்வழிச் சேர்வதையே!--நித்தியமில்
மாய மலக்கினில் மையல் முடிவில்மெய்
சாயம் வெளுத்த சரக்கு.

2 comments:

இப்னு ஹம்துன் said...

வாக்கினைப் பெற்றிட வாக்குறுதி நல்கியே
போக்கினை மாற்றுவார் பின்னாலே - நாக்காலே
தீயவரைச் சாடுவார் தான்திருந்தார் என்றிருப்பார்
சாயம் வெளுக்கும் சரக்கு!

Thangamani said...

அன்புள்ள இப்னு ஹம்துன்!
அழகான,அருமையான வெண்பா!வாழ்த்துகள்!
நான் கவிதைகள் கற்றுக் கொண்டிருக்கும் மாணவி!(மூதாட்டி)
போக்கினை என்று ஆரம்பிக்கும் அடியில், மூன்றாம்சீர்
பொ,போ,பு,பூ என்ற மோனையில் துவங்கவேண்டும்.
நீ எழுதியதும் அழகாக இருக்கிறது!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.