Wednesday, December 17, 2008

அருளைப் பொழிவாயே!

மழுமான் உடுக்கை மதி,ஆறு,
...மடவாள் உமையும் உடனாகக்
எழுமுன் நடனம் எழிலாகும்!
...இறைவா! நீயும் உயர்ந்தோங்கிக்
கழலும் முடியும் மறைத்தாயோ?
...கனலாய் அருணை ஒளியானாய்!
விழலாய்ப் பிறவி அழியாமல்
...விழைந்துன் அருளைப் பொழிவாயே!

2 comments:

jeevagv said...

ஒப்புமை யிலாமலே ஒப்பனை யிலாமலே

ஒன்றாய் சமைத்தது நன்றாய் அமைந்தது!

Thangamani said...

அன்புள்ள ஜீவா!

மிகவும் நன்றி!உங்கள் பாராட்டே கவிதையாக
மிளிர்கிறது!

அன்புடன்,
தங்கமணி.