Wednesday, August 27, 2008

காயம்.

வந்தாரும் போனாரும் இருந்தாரும் என்செய்வர்?
சொந்தம்பின் பந்தமென என்னாளும் இருந்திடுமா?
இறந்த பின்னால்தான் எரிந்திடுவாயென் நெஞ்ஜே,
இப்போதே உனக்கேன் ஆசைத்தீ மோகத்தீ?

கூடு போல் காயமிது குன்று போல் நின்றிடுமா?
ஆடுவான் ஒரு நாள் ஆண்டவனும் தாண்டவம்தான்.
ஆடிக்காற் றூழியில் அத்தனையும் பறந்து விடும்
கூடது மட்டுமிங்கே; வீடது செல்வது யார்?

குப்புறப் போட்டுவிட்டால் நிமிறாத ஆமை போல் நாம்.
குடும்பமும் சொந்தம் பந்தம் கும்பலாய் வாழ ஆசை.
உடும்பு போல் ஆசை பற்றி உண்மையை உதறி விட்டோம்

குடத்திலே அரிசி போட்டு குரங்கு போல் நம்மை ஆக்கி
இடக்காய் கை மாட்டிய பின் இக்கட்டில் சிரிப்பவன் யார்?

திப்பிலி

1 comment:

Thangamani said...

அன்புள்ள திப்பிலி,
"குடத்திலே அரிசி போட்டு குரங்கு போல் நம்மை ஆக்கி
இடக்காய் கை மாட்டிய பின் இக்கட்டில் சிரிப்பவன் யார்?"

அவனே ஆட்டுவிப்பான்!அவனே ஆடிடுவான்!

ஆடிடும் மேடையில் ஆளுக்கொரு பாத்திரம்
மேடை அவன் மேடை அல்லவா?(கண்ணதாசன்?)

தத்துவ விசாரங்கள் மெத்தவுமே பேசுதைய்யா!
காயமே இது பொய்யடா!வெறும் காற்றடைத்த பையடா!
சித்தர் வாக்கிது!

அசத்தி விட்டாய்!பலே!பேஷ்!
பார்ராட்டுகள்!