..
தென்றலினில் தலையாட்டிச் சின்னமலர் அசைவினிலே
...சிறுமழலை சிந்தும்பூஞ் சிரிப்பதின்பம்!
கன்றுதுள்ளிப் பாய்ந்தோடிக் களித்தாடி தனதனையைக்
...கனைத்தழைத்துத் தேடுகின்ற குரலதின்பம்!
குன்றதனில் தண்டுகொண்ட குமரனைதன் குருவெனவே
...கொண்டாடும் சிவனருளை நினைப்பதின்பம்!
என்றுமுள இயற்கைதரும் எழிலதனில் உளமுருகி
...இன்தமிழில் கவியியற்றித் திளைப்பதின்பம்!
அனை = அன்னை (இடைக்குறை)
அன்புடன்,
தங்கமணி.
வயசு கோளாறு
1 year ago
2 comments:
இன்பம் இன்பம்..
இறைவனை.. நினைப்பது இன்பம்..
அதனினும்.. இன்பம்..
தங்கமணி.. கவிதை தேன் இன்பம்....
தங்களின் எல்லாக் கவிதைகளையும் படித்து முடித்தால் நான் இரு பெரும் பேறு பெறுவது திண்ணம்.
1 சிவனருள்
2 .தமிழ் திறம்
நன்றி
Post a Comment