எனக்கெனும் கோவிலென் இதயம்
...இறைவனுள் வாழ்ந்திட வருவான்!
மனத்திருள் மாசினை ஒழித்தே
...மலர்ந்திடும் அன்பினை வளர்ப்பான்!
வினைதரும் துன்பினை எளிதாய்
...விலக்கிநல் பாதையை அருள்வான்!
நினைப்பினில் மோனத்தை நிறைத்தே
...நிதமவன் பாதமே துதிப்பேன்!
என் 66ஆம் வயதில், சந்த வசந்தக் குழுமத்தில் மரபுக் கவிதைப் படிக்கும் ஆர்வத்தில் சேர்ந்தேன்.
ஆனால் கவிதை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது,அங்குள்ள சான்றோர்கள் பொறுமையுடன், அன்புடன் கற்றுத் தருகிறார்கள்!
இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
சந்த வசந்தத் தலைவர் கவிமாமணி. திரு. இலந்தை அவர்கள், திரு. அனந்த் அவர்கள், திரு. பசுபதி அவர்கள், திரு. யோகியார் அவர்கள், இன்னும் பலர்!
இந்த அன்புச் சகோதரர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி
வயசு கோளாறு
10 months ago
8 comments:
அன்புள்ள அம்மா, எனதெழுத்துக்களையும் இங்கே பதிக்க அனுமதிப்பாயா? இனியொரு தமிழ் ப்லொக் ஆரம்பிப்பதற்கு பதிலாக,இங்கேயே எனக்கும் ஒதுங்க இடம் உண்டா உன் திண்ணையிலே? சங்கப் பலகையைப் போல தகுதி பார்த்து நீ என் எழுத்துக்களை சல்லடை செய்து அனுமதிப்பதாக இருந்தாலும் சரியே!
முதலாவதாக....
முரளியைப் பற்றி நான் 1989 இல் எழுதியது.
C32/3 வாழ்க்கையின் பங்குதாரர்;கூர்மையான அறிவும், முன்யோஜனையும் மட்டுமின்றி நறுக்கென்ற ஊசி தெய்க்கும் விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர்.கதிர்வேலு பொட்டிக்கடையின் சுகந்தங்களின் சுவையினைமையும் கதளீ பலத்தை கபளீகரிக்கும் எண்ணற்ற இரவு நடைகளினாள் இணை பிறியாத நண்பர்.
அந்த நாள் ஞ்யாபகத்திலிருந்து ஒன்று இங்கே.
'கொடுக்கு' என்ற தலைப்பில் எழுதியது.
----------
தேளின் வால் பகுதி
தேனியின் மூக்கு
தெலுங்கில் மகன்
முரளியின் நாக்கு!
அன்புள்ள dhileep
கொடுக்கு..
அடுக்கடுக்காய்.. சொல்லெடுத்து..
மிடுக்காய்.. ஒரு கவிதை..
அன்பு திலீப்,
உன்மடல் கண்டு மகிழ்ந்தேன்!
என்னைக் கேட்க வேண்டுமா? இது உங்கள் வலைப்பூ!!
நாம் எல்லோரும் இங்கு பதியலாம்!நான் கேட்டேன்.
குமார்தான் இந்த வலைப் பூவை அமைத்துக் கொடுத்தான்.
அன்பு அகிலா,சூப்பர் ஆ,சுலபமா கவிதை எழுதரே!வாழ்த்துகள்!
உனக்கும் சம்மதம்தானே?நீ,குமார் உஷா,சன்கர்,
என் பேரன்கள்,பேத்திகள் எழுதலாம்.
அன்புடன்,
தங்கமணி
அன்பு திலீப்,
"கொடுக்கு" ஹைக்கூவைக் கண்டு
சிரித்து மகிழ்ந்தேன்.c32/3 பாகலூர் ஹட்கோ
வாழ்வு நினைவில் நிற்கிறது!
நகைச்சுவை உனக்கு இயல்பாக வருகிறது!
வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
இதயம் என்கோயில்! கவிதை அருமை. வாழ்த்துகள் பாட்டி!
இலக்கிய இன்பம் எனும் வலைப்பதிவு வழியே தங்கள் பதிவுக்கு
வந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் கவிதை பொருட்செறிவு நிறைந்துள்ளது. வலையில் காணப்பெறும்
பற்பல தமிழ்க்கவிதைகளுக்கு மறைசார் ( classical ) மற்றும் கிராமிய
இசை அமைப்பது எனது பொழுதுபோக்கு. ( hobby ) . தாங்கள் அனுமதி
தந்தால், தங்கள் பாடலுக்கும் இசை அமைப்பேன்.
வயதான இக்கிழவனுக்கு எந்த வணிக நோக்கும் இல்லை.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
திரு.சூரி அவர்களுக்கு,
வணக்கம்.உங்கள் மடல் கண்டேன்.மிகவும் நன்றி.
இசை அமைக்கும் அளவிற்கு பாடல் இருந்தால் அமையுங்கள்
நன்றியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
திரு.சூரி அவர்களுக்கு,
வணக்கம்.உங்கள் மடல் கண்டேன்.மிகவும் நன்றி.
இசை அமைக்கும் அளவிற்கு பாடல் இருந்தால் அமையுங்கள்
நன்றியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment