Wednesday, August 27, 2008

மனமென்றோர் மாயை!

மனத்தொடு ஒருமை குன்றின் மார்க்கமே வாயென்றாகும்
உளத்தொடு சமரச மின்றேல் உண்மைகள் உறிக்கப் படலால்
பேசுதல் தேடி நீவிர் பேதை போல் ஓடுகின்றீர்!
பேசுதல் தவிர்க்க வேண்டின், நீங்களும் உங்கள் மனமும் நிசப்தமாய் கூடல் வேண்டும்.
மௌனமே பரம நண்பன்; மௌனமே பரம சத்ரு.
மௌனமே பரம ஆசான்; மௌனமே உலக சாந்தி!
மனத்தொடு தர்க்கம் வேன்டாம்; மாயையைக் கிளற வேண்டாம்!

திப்பிலி

1 comment:

Thangamani said...

அன்புள்ள திப்பிலி,
தக்ஷிணாமூர்த்தி மோன
உபதேசம் செய்தார்!அந்த மௌனத்தை
உயர்வாகக் கவிசெய்தது மிக்க
அழகு!சிறப்பு!!வாழ்த்துகள்!

மனத்தொடு தர்க்கம் வேன்டாம்; மாயையைக் கிளற வேண்டாம்!
மௌனமே பரம ஆசான்!மௌனமே உலகசாந்தி!

அருமையான விளக்கம்!

அன்புடன்,
தங்கமணி.