Wednesday, November 30, 2011

நஞ்சன்கூடு கண்டனே!-- 3

கீதா குரவர் திருமுறை
...கேட்டு மகிழ்ந்து நடமிடு
பாதா நதியும் மதியுடன்
... பாம்பும் அணிந்த தயைநிறை
போதா ஆலின் கீழமர்
...புனிதா நீயே எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
...நஞ்சன் கூடு கண்டனே....5

விதியாய் வினையாய் வாட்டியே
....மிரள வைக்கும் துன்பறக்
கதியாய் கழலைப் பற்றியே
....கந்த மலர்கள் தூவியும்
துதியாய் இசையாய் ஆனவா
....தூயா பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
....நஞ்சன் கூடு கண்டனே....6

1 comment:

Geetha Sambasivam said...

எம்துணை
நாதா என்பார்க் கருள்செயும் //

துணை அவனே! நன்றி அம்மா.