Saturday, November 12, 2011

திருக் கோடிகா! -- 2

வெளிர்தண் பொடிபூசும் விடையூர் பெருமானை
மிளிர்கண் ணுதலானை வேண்டி அடைநெஞ்சே
அளிசெம் மலர்மேவி ஆர்க்கும் பசுஞ்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே...3

அளி=வண்டு.

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் தாள் இறைஞ்சி அடைநெஞ்சே
பொங்கார் சிறைவண்டு போதில் இசைபாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே...4

போது=மலர்.

2 comments:

Geetha Sambasivam said...

இங்கார் சிவனார்போல் இரங்கும் அருளாளர்
எங்கா டனவன் //

இங்கு ஆர் சிவனார் போல் இரங்கும் அருளாளர் எங்கு ஆடன் அவன்?

இப்படிப் பிரிக்கணுமா???

Geetha Sambasivam said...

தொடர