Thursday, December 1, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 4

உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7

வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8

4 comments:

ஷைலஜா said...

நன்றாக இருக்கிறது மேடம்
(நினைவிருக்கா என்னை?:)

Thangamani said...

அன்புள்ள ஷைலஜா
உன்னை எப்படி மறக்க முடியும்?பாட்டெல்லாம்
பாடிக் காண்பித்தாயே?பிரியமுடன்,பேசியதெல்லாம்
மறக்கமுடியுமா?நெனச்சிண்டே இருக்கேன்.
உன் வலைப்பூப் பார்த்து மகிழ்ந்தேன்.அருமை!
இந்த வலைப்பூ விற்கு வந்ததற்கும்,பாராட்டுக்கும்
மிக்க நன்றி!ஷைலஜா!

Geetha Sambasivam said...

பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா //

ரசித்தேன்.

Thangamani said...

ரசித்ததற்கு மிக்கநன்றிகீதா!