Thursday, November 10, 2011

திருக் கோடிகா!

"மா புளிமாங்காய் மா புளிமாங்காய்" - வாய்பாடு.
புளிமாங்காய்ச்சீர் வரும் இடத்தில் சில சமயம் கூவிளமும் வரலாம்.
==============================================================


புயலென் றிடர்தன்னைப் போக்கும் பிறைசூடி
பெயலில் உலகுய்க்கும்; பேறாய் அடைநெஞ்சே
கயல்கள் குதித்தோடும் கால்வாய் வழிந்தோடும்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே...1

பெயல்=மழை.

பாலன் தனக்காகப் பரிந்தே உதைசெய்து
காலன் தனைச்செற்ற காலன் அடைநெஞ்சே
காலை பொழுதாகக் கானக் குயில்பாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே...2

4 comments:

sury siva said...

திருக்கோடிக்கா என்று நீங்கள் வர்ணிக்கும் ஸ்தலம் சிவபெருமானது
கோடிக்கரையா ?

அருள் கூர்ந்து பதில் அளித்திட வேண்டும்.

சுப்பு ரத்தினம்.
பி.கு. வழ்க்கம் போல யான் இந்த பதிகத்தை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுகிறேன்.
உங்கள் பதில் கிடைத்தபின் அந்த ஸ்தலத்தில் உள்ள சிவ பெருமான் படத்துடன்.

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
விளக்கம் லின்க் பார்க்கவும்.
உங்கள் சேவைக்கு மிக்க மகிழ்வுடன் நன்றி!
கேட்டு மகிழ்வோம்.



திருக்கோடிகா என்ற இத்தலத்தின் இற்றைப் பெயர் - திருக்கோடிக்காவல்.
கோயில் தகவல்களுக்கும் படங்களுக்கும் இங்கே காண்க:
http://temple.dinamalar.com/New.php?id=1064


http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=119

sury siva said...

தங்களது பதிகத்திற்கு தலை வணங்கி நிற்கிறேன்.

இந்த பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாட விழைந்தேன்.

இங்கே பதிவு செய்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது வரவும். கேட்கவும்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
யதுகுலகாம்போதி ராகத்தில் மிகச் சிறப்பாக,
பக்திபாவத்தோடு பாடியதைக் கேட்டுமகிழ்ந்தேன்.
இன்னொரு மகிழ்ச்சி!பேத்தியின் பிறந்தநாளில் பாடியிருக்கிறீர்கள்!
ரொம்ப சந்தோஷம்.
தங்கள் பேத்திக்கு என் அன்பான ஆசிகள்!