Sunday, November 20, 2011

திருக்கோடிகா!--5

ஈடும் இணையென்றும் இல்லா இறையோனைப்
பாடும் இசையாலே பரவி அடைநெஞ்சே
ஆடும் நடராசன் அலர்தாள் சிரம்சூடிக்
கூடும் அடியார்சேர் கோடி காவையே...9

மத்தா யுழல்வேனை வாட்டும் வினைதீர
அத்தா எனையாளென் றணுகி அடைநெஞ்சே
முத்தா டிடுமாப்போல் முரன்றே அளிபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே...10

4 comments:

மழை said...

உண்மையா எனக்கு புரியலைங்க..என்னோட தமிழ் அறிவு அவ்ளோதான்..!!!

Thangamani said...

அன்புள்ள மழை,
வருகைக்கும்,வலைப்பூவில் சேர்ந்ததற்கும் நன்றி.
ஒப்பிலாத,
திருக்கோடிக்கா(திருக்கோடிக்காவல்) சிவபெருமான் புகழ்பாடி
அவனை அடைநெஞ்சமே,என்றும்
நடராசனின் திருத்தாள் நினைவாக சிரம்சூடி,
அடியரெல்லாம் ஒன்றுகூடி சேரும் திருக்கோடிகாவை அடைநெஞ்சமே.
என்றும் இப்பாடலின் கருத்து.நன்றி!

SelvamJilla said...

you lines are simply super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

Thangamani said...

அன்புள்ள செல்வம்முனியாண்டி,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன்.