பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3
பணி=பாம்பு,பொடி=சாம்பல்.
மதவேள்= செருக்குள்ள மன்மதன்.
செடியா யடர்தீ .. வினையாலே
...தெளிவே துமிலா .. துழல்வாரும்
நொடியே அரனா.. மமதோதில்
...நுதலார் விழியோன் .. புகலாவான்
துடியா ரிடையா .. ளுமைநாதன்
...துணையா யிணைதாள் .. தருமீசன்
அடியார் திரளூர் .. மழபாடி
...அகலா துறைமா .. மணிதானே....4
வயசு கோளாறு
1 year ago
3 comments:
இது என்ன... திருமழப் பாடி கோவிலின் தல புராணமா? தெர்யாமல் கேட்கிறேன். சொல்லுங்க!!
tvthangamani has left a new comment on your post "திருமழபாடி!--2":
//இது என்ன... திருமழப் பாடி கோவிலின் தல புராணமா?
தெர்யாமல் கேட்கிறேன். சொல்லுங்க!!//
பணியோ டலையா.. றதனோடு
...பனிவா .னிலவை.. அணிவானே
தணியா நனிகோ..பமதாலே
...தழலாய்..மதவேள்.. பொடியானான்
பணிவே உருவா .. முழவாரப்
.. படையா ளிபரா .. வியநாதன்
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....3
பணி=பாம்பு,பொடி=சாம்பல்.
அன்புள்ள ராஜன்,
வருகைக்கு நன்றி!
இப்பாடல் தலபுராணமில்லை.மழபாடி என்னும்
தலத்தில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானை,
அவனது புகழை துதிக்கும் பாடல்.
பாம்பு,கங்கை,பிறைநிலா இவற்றை சூடிய சிவன்,
மிகுந்த கோபத்துடன் மன்மதனை எரித்தவன்.
பணிவே உருவான, உழவாரப்படையுடையவரான
அப்பர் துதித்த நாதனானவன், அழகான சோலைகள்
சூழ்ந்த திருமழபாடி தலத்தைவிட்டு நீங்காத
மாணிக்கமேயாவன்.
கவிதை நன்று அம்மா.
தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்...
இணைப்பு : http://blogintamil.blogspot.com/2013/07/blog-post_23.html
Post a Comment