மொக்காய் மலராகி முதிர்ந்து வருமன்பில்
சிக்கா திருப்பானோ தேடி அடைநெஞ்சே
மிக்கார் அளிகூடி மிழற்றும் மலர்ச்சோலை
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே....5
பாதி மதியானின் பாத மலர்தன்னை
ஓதி துதிபாடி உருகி அடைநெஞ்சே
சோதி யவன்பேரைச் சொல்லி வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே....6
வயசு கோளாறு
1 year ago
2 comments:
வினைதீர்ந்த
கோதில் =கோதில்=என்ன பொருள் அம்மா?
//கோதில் =கோதில்=என்ன பொருள் அம்மா?//
கோது+இல்= கோது இல்லாத,
கோது+இல்=குற்றம் இல்லாத. என்று பொருள் கீதா.
நன்றி கீதா!
Post a Comment