
புரியா மயலாம் மயக்கங்கள்
இரியக் கருதில் அடைநெஞ்சே!
கரிகா டுடையான் அடிதேடும்
கரியாற் கரியான் கடவூரே....9
கரிகாடு =சுடுகாடு
கவலை மிகுஇப் புவிவாழ்வில்
அவமாய் அலையா(து) அடைநெஞ்சே!
அவசம் தருமின் அருள்தங்கும்
கவசத் தலமாம் கடவூரே!....10
அவசம்=வசமின்மை, பரவசம்
No comments:
Post a Comment