துயிலா மனமொடு பயணம் செய்திடத்
...தொலைவாய் சென்றிடலாம்!
துயராம் தளர்வினை வென்றால் கிடைத்திடும்
...தொடராய் நன்மைகளே!
உயிராம் உணர்வினில் உதிக்கும் கருத்தினில்
...உயர்வாய் கவிபடைப்போம்!
அயரா முயற்சியில் வாய்க்கும் இலக்குமே
...அடைதல் கூடுமன்றோ?
(சந்தவசந்தக் குழுமத்தில் பயிற்சிக்காக முன்பு இட்ட
அறுசீர்விருத்தம்.)
வயசு கோளாறு
2 years ago

2 comments:
அருமை ங்க
பயணத்தின் பொழுது மனம் தூங்குதல், என்ன ஒரு சிறப்பான தருணம் இது. எனக்கு பயணத்தின் பொழுது மனம் (எண்ணம் ) தான் பேருந்தை, ரயிலை, விமானத்தை விட வேகமாக பயணிக்கிறது.
அன்புள்ள ராம்ஜி,
மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கு.
நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment