Sunday, June 13, 2010

கடவூர் அடை நெஞ்சே!---1


(வஞ்சி விருத்தம் - "புளிமா புளிமா புளிமாங்காய்" என்ற வாய்பாடு)

குறைசேர் மனதுள் குமையாமல்
நிறைவே அடைய நினைநெஞ்சே!
பிறையேர் சடையன் பெருநிதியன்
கறைசேர் மிடறன் கடவூரே.....1

குமைதல்=வருந்துதல்
ஏர்=மிக்க அழகு.


இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!
மருமா மலர்சூழ் பொழில்மேவும்
கருமா மிடறன் கடவூரே.....2

3 comments:

அப்பாதுரை said...

>>இருளா குவினை யதுதீர
வெருளா தவழி அடைநெஞ்சே!

அருமை!
கடவூர் அபிராமி என் தாயின் அபிமான தெய்வம்.

Thangamani said...

அன்புள்ள அப்பாதுரை!
உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும்
மகிழ்வான நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

கவிதையும் நன்று.அதற்கான சிவனின் படமும் நன்றாக இருந்தது.
உமா.