Thursday, June 17, 2010

கடவூர் அடைநெஞ்சே!--3


புவிவாழ் வெனுமோர் பவமூழ்கித்
தவியா வழியாம் அடைநெஞ்சே!
சவிசேர் நவியன் சிவனாரின்
கவினார் பொழில்சூழ் கடவூரே....5

சவி=ஒளி,அழகு.
நவியம்=புதுமை,புதியது.


நிலையா உடலென் றறிவோடு
நலமே கொளநீ நவில்நெஞ்சே
அலைசேர் நதியன் அரவேதான்
கலமா உடையான் கடவூரே....6

கலம்=ஆபரணம்,அணிகலம்

2 comments:

Geetha Sambasivam said...

அரவேதான்
கலமா உடையான்//

அரவே தான் புரியறது. கலமா உடையான் என்றால்??? அரவை ஆபரணமாய்த் தரித்தான் என்ற பொருளா??/

மற்றபடி ஈசனின் இரு படங்களும் வெகு அழகு. அதுவும் அந்த ரிஷபத்துடன் இருக்கும் படம் மிக மிக அருமை.

Thangamani said...

//அரவே தான் புரியறது. கலமா உடையான் என்றால்???
அரவை ஆபரணமாய்த் தரித்தான் என்ற பொருளா??//

ஆமாம் கீதா!நீங்கள் சொன்னது சரி.
படங்களைப் பற்றிய பாராட்டுக்கு நன்றி!
படங்கள் வரைந்தவருக்கு இந்த பாராட்டுகள் சேரட்டும்!

அன்புடன்,
தங்கமணி.