Friday, January 2, 2009

செங்கதிரோன் வந்துதித்த தேசு.

செங்குடுமிச் சேவல் சிலிர்த்துடன் கூவிடவும்
பங்கயப்பூ உள்ளம் பரவசத்தில்--பொங்கிடவும்
தங்கமென மஞ்சலெழில் தாரணியும் பெற்றிடவே
செங்கதிரோன் வந்துதித்த தேசு.

2 comments:

Anonymous said...

கவிதை நன்றாக இருக்கிறது.
"தேசு" என்றால் என்ன?
தேசுலாவுதே தேன் மலராலே....என்ற பாட்டிலே...
அதற்கு வண்டு அல்லது தேனீ என்ற அர்த்தமாயிருக்கும்
என்று நினைத்தேன்.
தேசு= மேகம்??
உமா.

Thangamani said...

அன்பு தங்காய்!
தேசு என்றால் ஒளி,அழகு,புகழ்,பெருமை
இத்தனை பொருள்கள் அகராதியில் இருக்கு!
இங்கே(ஒளி என்னும் பொருளில்) கதிரவன்
உதய ஒளி செய்யும் அழகுக் காட்சிகள்!

தேசுலாவுதே தேன்மலராலே என்னும்போது
அழகு உலாவருதே எனலாமா?

அன்புசோதரி,
தங்கமணி.