Thursday, January 29, 2009

நித்தியானந்த! தாள் பணிந்தேன்!

குறையால் மலியும் கொள்கையிலாக்
...குணங்கொண் டேனை ஆண்டருள்வாய்!
சிறையாம் வாழ்க்கைத் தத்துவத்தில்,
...தெளிவாய் ஞானம் ஊட்டிடுவாய்!
முறையாய் பக்தி மூழ்குமனம்
...முகிழ்த்தே யோங்கும் சூட்சுமம்தா!
நிறைவாய் நிருத்தம் நெஞ்சினிக்கும்
...நித்யா நந்த! தாள்பணிந்தேன்!

6 comments:

jeevagv said...

'நிறைவாய் நிருத்தம்' ஆடி நிறைத்த நெஞ்சம்!
ஆகா!
தங்கள் நெஞ்சினிக்க, அந்நெஞ்சின் கவியும் எங்களை நிறைத்தது!

jeevagv said...

உங்க பதிவுகள் பிடிச்சிருந்ததுனாலே, பட்டாம் பூச்சியை உங்க பக்கம் பறக்க விட்டு இருக்கேன். முடிஞ்சபோது, நீங்களும் எடுத்து பறக்க விடலாம்! இல்லைனாலும் பரவாயில்லை!
http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_31.html

sury siva said...

நித்திய ஆனந்தனே ! நின் தாள் ஒன்றே
சத்தியமெனபதிலோர் ஐயமும் உண்டோ !

உன் புகழ் பாடி மகிழ்வேன்

சுப்பு ரத்தினம்.

பின் குறிப்பு: நண்பர் ஜீவா அவர்களின் வலைப்பதிவு மூலமாக இவ்வலைக்கு
வந்தேன். இதை ப்பாடி மகிழ் தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

sury siva said...

http://www.youtube.com/watch?v=Bd-sfxfGIrw

இங்கு உங்கள் தியான கீதத்தைக் கேட்கலாம்.
விருத்தமாகவும் பன் ராகங்களிலும் பாட முயற்சித்திருக்கிறேன்.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, ஸி.டி.

Thangamani said...

அன்புள்ள ஜீவா,
பாராட்டுக்கு நன்றி!மகிழ்ச்சி!
அதென்ன பட்டாம்பூச்சி?புரியலையே?
உங்கள் வலையை பார்க்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

தாழ்மையான வணக்கங்களும், வாழ்த்துகளும் அம்மா, பட்டாம்பூச்சி விருதுக்கு வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் அருமையான படைப்புகளுக்கும் என் வணக்கங்கள். அறிமுகம் செய்த ஜீவாவுக்கு என் நன்றி.