மழவிடை ஏறி வலம்வரு வாயே
...மறைதொழு தேத்திடும் ஈசா
முழவுடன் துடியின் முந்துறு ஒலியில்
...முடிவிலி யுன்நடம் பேறே
கழலினை அணைத்துக் கதறிடு வோனைக்
...காத்தருள் செய்தவன் நீயே
பழமலி சுவைதேர் பைங்கிளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே!....9
சின்மய உருவில் திகழ்குரு வானாய்
...தெளிவுறு சிந்தையை தாராய்
பொன்மன அடியார் பொழிதமிழ்ப் பாடல்
...புகழ்ந்திடும் உனதருள் திறமே
நன்மையில் இருப்பாய் நலமிகச் செய்வாய்
...நதிமதி சூடிடும் தேவே
பன்மலர்த் தேனுண் பூவளி பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....10
வயசு கோளாறு
10 months ago
3 comments:
கழலினை அணைத்துக் கதறிடு வோனைக்
...காத்தருள் செய்தவன் நீயே //
இது பொதுவாக அடியார்கள் அனைவருக்கும் சொல்லும் குறிப்புத் தான் இல்லையா?? அவன் கழலிணை அணைத்துக்கதறத் தான் வேண்டும். காத்து அருள் செய்வான் நிச்சயமாய். நன்றி அம்மா.
மார்க்கண்டனை எண்ணித்தான் எழுதினேன்.
நீங்கள் கூறுவதும் சரியே.கீதா!
அப்படியா?? எனக்கு மார்க்கண்டேயன் நினைவிலேயே வரலை! நன்றி அம்மா விளக்கத்திற்கு.
Post a Comment