Monday, July 4, 2011

சிவன்கழல் தொழுவாய்!

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான்
சிந்தையில் சந்ததம் அஞ்செழுத் தோதியு ணர்கையில்
...சித றிடும் பவ மெனு சிறுமையும்..தொலையும்
அந்தமில் ஆதியும் பாதியும் ஆனவொர் மெய்யனாம்
...அரி அயன் அவர் தொழும் அழலொளி..சிவனே....1

பூத்திடும் கொன்றையம் பொன்மலர் இன்எழில் மார்பிடை
...புனை சரம் புரள் கவின் திகழுற நிறைவாய்
தோத்திர மாகிய சொற்றமிழ் மாமறை வேட்பவன்
...துடி யடி யொலி நட மிடுமரன் அவனே
பாத்திர மாயவன் பத்தியில் கூடிடும் அன்பினில்
...பரன் அரன் பதம் சரண் புகலென அடைவார்;
சூத்திர தாரியின் சொற்படி ஆடிடும் பொம்மைநம்
...சுழல் பழி அழி வழி செயுநம திறையே!....2

3 comments:

Geetha Sambasivam said...

முந்திடு வெவ்வினை தந்திடு துன்பம தன்றெனும்
...முடி பிறை கறை மிட றுடைமுழு.. முதலே
பந்தமும் பாசமும் மிக்குத ளைத்துவி லங்கிடும்
...படர் இடர் தொடர் நிலை யறுகென..உனைநான் //

எனக்காகவே எழுதிய மாதிரி இருக்கிறது அம்மா. பல்வேறு பிரச்னைகளால் அடிக்கடி வர முடியறதில்லை. :( ஆனால் சந்தவசந்தத்தில் ஒரு முறை படித்துவிடுவேன். :D

Thangamani said...

அன்பு கீதா,
மனவலிமையுள்ள உங்க முன்னே
எந்தப் பிரச்சனையும் ஓடிவிடும்.
நன்றி கீதா!

Thangamani said...

அன்புள்ள கீதா,
எத்தனையோ வேலைகளுக்கிடையில்
வந்துபடித்துப் பின்னூட்டம் இடும்
உங்களுக்கு என் நன்றி கீதா!