Tuesday, July 19, 2011

சிவனருள் நினை!

தஞ்சம டைந்தவன் தண்ணருள் வேண்டிநி னைந்திடில்
...தளை பவ வினை உளை செயுமிடர் அகலும்,
பிஞ்சிள வெண்மதி செஞ்சடை அந்திய தன்வணன்
... பிடி உமை இட மணி களிறென வருவான்
கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...குதி நதி குளிர் செய சிரசணி எழிலில்
அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே.

(1--௬ சீர்கள் மோனை.)

4 comments:

jeevagv said...

குதி நதி :-) ரசித்தேன்!

வெண்பொடி மெய்யினில் அணிபவனும்;
பணி திகழ்பனும்;

என்று படிக்கவேண்டுமல்லவா?


பணி : நாகம்? / பட்டாடை?

நன்றிகள்.

Thangamani said...

//குதி நதி :-) ரசித்தேன்!//

சிவசிவாவுக்கு என் நன்றி!
ஜீவா!,சந்தவிருத்தத்தில்,சிவசிவா
சொன்ன அழகான சொல்,அந்த சொல்லை ஆர்வத்தால் நானும் இட்டேன்.
//மதிபுனை அண்ணல், குதிநதி தன்னை
.. வளர்சடை வைத்த அளப்பருங் கருணைப்//


வெண்பொடி மெய்யினில் அணிபவனும்;
பணி திகழ்பனும்;
என்று படிக்கவேண்டுமல்லவா?
பணி : நாகம்? / பட்டாடை?

நன்றிகள்.

//அஞ்சல ருள்செயும் அன்பொடு வெண்பொடி மெய்யினில்
...அணி பணி திகழ் தர நடம்புரி சிவனே. //
வெண்பொடி மெய்யினில் திகழ்தர,
அணிகின்ற பாம்பு மெய்யினில் திகழ்தர
என்னும் கருத்தில் எழுதினேன்.
'மெய்யினில் திகழ்தர' என்னும் சொற்றொடரை வெண்பொடி,நாகம்
இரண்டுக்கும் பொதுவாக வைத்தேன்.
உங்கள் கருத்துக்கு
மிக்கநன்றி!ஜீவா!

jeevagv said...

அருமை, நன்றி தங்கமணியம்மா.

Geetha Sambasivam said...

கொஞ்சுச தங்கையின் இன்னொலி தண்முழ வொன்றிட
...குதி நதி குளிர் செய சிரசணி எழிலில் //

ஆஹா, அருமையான வர்ணனை அம்மா. சதங்கையின் இன்னொலி கேட்டே எழுதி இருக்கிறீர்கள். அனுபவச் சிதறல்.