Thursday, July 28, 2011

பராய்த்துறை மேவிய பரனே!-- 3

சுடர்கிற விடியல் சுதியொலி பாடல்
...சொலுமுன தருளதன் திறமே
தொடர்கிற அன்பில் துணையெனக் கொண்டேன்
...துன்பினில் ஆதரம் தருவாய்
குடர்படு கருக்கொள் கொடிதெனும் பவமே
...குலைவினை அடைவழி அருளாய்
படர்கிற மருதம் கமழ்வுறு பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....5

விண்ணிழி கங்கை வெண்மதி சூடி
...வெண்பொடி மெய்யணி ஈசா
கண்ணிய துன்றன் கருணையை யன்றோ
...கயல்விழி பங்குடை யோனே
எண்ணிய எய்தல் இறையரு ளாலே
...எனைஇடர் செய்வினைத் தீராய்
பண்ணிய வண்டும் பாடிடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே.


கண்ணியது=கருதியது
பண்ணிய=சுதிலய

2 comments:

Geetha Sambasivam said...

பண்ணிய=சுதிலய //

அழகான சொல். பண் என்றாலே ராகம் தானே. சுதிலயத்தோடு ரீங்காரமிடும் வண்டுகள் நினைவில் வருகின்றன.

Thangamani said...

அழகாய்ச் சொன்னீர்கள் கீதா,
நன்றி!