Thursday, July 21, 2011

அன்னை அருள்!

பொன்னை நிலையெனப் போற்றும் அறிவிலாப் பூரியரும்
புன்னை மலர்கொடு பூசை செயவருள் பூத்திடவும்
தன்னை நினைந்திரு தாளைத் தொழுபவர் தம்துணையாய்
முன்னை வினைதனை முற்றும் அழியவும் முன்னுகந்தே
மின்னை நிகர்த்தவள் மிஞ்சும் தயைபுரி மீன்விழியாள்
அன்னை விழிமலர் அஞ்சல் அருளுவள் அன்பருக்கே.

2 comments:

Geetha Sambasivam said...

பொன்னை நிலையெனப் போற்றும் அறிவிலாப் பூரியரும் //

ஹாஹா, நகைக்கடைக்காரங்களுக்கும், அங்கே குவியும் மக்களுக்கும் சொல்லணும் போலிருக்கு! நல்லதொரு ஆக்கத்துக்கு நன்றி அம்மா.

Thangamani said...

அன்புள்ள கீதா,
உங்கள் கருத்துக்கு நன்றி!
நினைவில்
ஓர் திரைப்பாடல்,
பொன்னல்ல பொருளல்ல பூவல்ல செல்வங்கள்,
என்று வரும் பாட்டில்
'தேனூறும் தேவாரம்,இசைபாட்டின் ஆதாரம்
ஊன்மெழுகாய் உருகும்,கரையும் அதிலுலகம் மறந்துபோகும்'
தெய்வ இசையைக் கேட்டு மகிழ்ந்தேன்.