விந்தை யான விரிசடை கொண்டவன்
அந்த மில்நடம் ஆடிடும் தாண்டவன்
சுந்த ரேசனாய்த் தோன்றி அருள்பவன்
அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே!
நாவி னுக்கிதம் நல்குமஞ் சட்சரத்
தேவி னைத்தெளிந் தேத்தும் அடியவர்
பாவி னுக்குப் பரிந்தருள் செய்பவன்
சேவில் ஏறும் திருஆல வாயனே!
வயசு கோளாறு
2 years ago

1 comment:
நாவி னுக்கிதம் நல்குமஞ் சட்சரத் //
அழகான இனிமையான வரிகள். ஈசன் நாமம் நாவினுக்கு இனித்து இதமளிக்கும் என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றிம்மா.
Post a Comment