ஆலவாய் அண்ணல் (திருஆலவாய் - மதுரை)
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்.
முதல் சீர் 'மா'. இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும். 2௩௪ சீர்களுக்கிடையில் வெண்டளை பயின்று வரும்.
நேர் அசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்துகள். நிரை அசையில் தொடங்கினால் அடிக்கு 12 எழுத்துகள்.)
சிவ சிவாவுக்கு என் மனமுவந்த நன்றி!
நீறு பூசு நிமலன் விரிசடை
வீறு மேவிடு விண்ணதி யோடொரு
கீறு வெண்பிறைக் கீற்றனின் தாள்தொழப்
பேறு கூட்டும் பிரான் ஆல வாயனே!
எடுத்த பொற்பதம் ஏந்தெழில் ஆடலை
மடுத்த அன்பரும் வாழ்த்தி மகிழ்வுடன்
தொடுத்த பாமலர் சூடியே இன்னருள்
கொடுக்கும் ஆலவாய் மேவிய கூத்தனே!
வயசு கோளாறு
10 months ago
2 comments:
நம்பிக்கைக் குழுமத்தில் பார்த்தேன் சிவசிவாவின் பாடல்களை, அப்போலேருந்து வரணும்னு, முடியலை! :(எளிமையான பாடல்களால் பாமாலை சூட்டி இருக்கீங்க அம்மா.
அன்பு கீதாம்மா!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
Post a Comment