Wednesday, January 6, 2010

சிவன் பூங்கழல் !

விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)

3 comments:

Geetha Sambasivam said...

கந்த பத்யம்??? புதுசா இருக்கு. கொஞ்சம் விளக்க முடியுமா???

Thangamani said...

அன்புள்ள கீதா!பொங்கல்நல் வாழ்த்துகள்!
'கந்தபத்யம்'பற்றி,திரு.சிவசிவா கொடுத்துள்ள
விளக்கம் காணவும்.பதிகம் பாடியுள்ளா
ர்.சிவாவுக்கு என் நன்றி!
ஒரு பாடலுக்கே திணறித் தவறுகள் செய்து முயன்றேன்.

கந்த பத்யம் - kanda padyam
---------------------------------
இது தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகிற பாடல் வகை.
இதன் இலக்கணம் (நான் அறிந்த அளவில்):
1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.
2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.
லகு = குறில் = 1 மாத்திரை = "I"
குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"

3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்பு இப்படி இருக்கவேண்டும்:
W X W
X W Y W Z
W X W
X W Y W Z

இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:

X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU IUI UII UU

W = "IUI" (லகு-குரு-லகு) என்ற அமைப்பைத் தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த
ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIII IIU UII UU

Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும்
வரலாம் - அதாவது -
IIII IUI

Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் - அதாவது -
IIU UU

4) எதுகை: எல்லா அடிகளுக்கும் இடையே எதுகை அமைய வேண்டும்.
5) மோனை: 2-ம் அடியிலும், 4-ம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.