குறைபிறைஉறை விரிசடையொளிர் நறைமலர்ச்சரம் அணிபவன்
மறையறைகழல் தொழும்சிறுவனுக் கருளமறலி உதைத்தவன்!
கறைமிடறுடை நடமிடுசிவன் உறுநரினுளம் நிறைபவன்!
சிறைஉறுபவ வினையறும்படி முறைசெயும்நம திறைவனே!
சிறை=தளை
உறுநர்=அடியார்
வயசு கோளாறு
10 months ago
5 comments:
அருமையான பாட்டு அம்மா! இருபதாம் நூற்றாண்டில் பதிமூன்றாம் திருமுறை உருவாகி கொண்டிருக்கிறது! வளர்க நும்பணி! சிறக்க நும் நாளே!
//அருள மறலி உதைத்தன்//
மறலி - காலனா?
அன்பு விஜய்!
இறைவன் அருளில் நனைந்து,உருகி,
இறையடியவராம் சான்றோர்
அருளிச் செய்த"திருமுறை"க்கு ஈடு இணை( கிடையாது!)
சொல்வதும் சரியல்ல என்பது என் தாழ்மையான
கருத்து.
இறைவனைப் பற்றிப் பாடல் இயற்றுவதில் ஒரு மகிழ்ச்சி.
ஒரு சில முயலுகிறேன்.
உன் பாராட்டுக்கு நன்றி!வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
//அருள மறலி உதைத்தன்//
மறலி - காலனா?
ஆம்.காலன்.
அருமை அம்மா, மறலியைக் காலால் உதைத்த காட்சியைக் கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். பல நாட்கள் ஆகிவிட்டன, வந்து, நிறைய இருக்கு படிக்க.
அன்பு கீதா!
கவிதைப் படிக்கும் உங்கள் ஆர்வத்தைப்
பாராட்டுகிறேன்.மகிழ்ச்சியாக இருக்கு.
உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொண்டு
இலக்கியத்தில் வலம் வரவும்!நன்றி!கீதா!
Post a Comment