Thursday, January 15, 2009

கற்றை கனல் வித்து!

முத்துநிகர் பத்திநகை முத்தையனின் வித்தகத்தை
பத்திமனச் சுத்தியுடன் பத்திடுவோம்!-- நித்தனவன்
சத்திசிவன் சித்தமகிழ் சத்குருவாய் உத்தவனோர்
வித்தையொளிர் கத்தைகனல் வித்து.

2 comments:

Muruganandan M.K. said...

எனக்கு நல்ல தமிழ் இலக்கியங்களில் பரிச்சியம் குறைவு. உங்கள் கவிதையின் ஓசை நயம் அற்புதமாக இருக்கிறது. பட்டனத்தார் பாடலை நினைக்கத் தூண்டியது.

Thangamani said...

அன்புள்ள முருகானந்தம்!
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
முருகனின் அருள்திறம் எண்ணி,அவன் சிவனுக்கு குருவானவன்,
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உண்டான நெருப்புக் கதிரில்
தோன்றியவன் என்று அவன் புகழ்பாடும் பாடல் இது.

அன்புடன்,
தங்கமணி.