Sunday, April 4, 2010

குன்றத்தூர் அமர்ந்த கோவே! -- 3

வறுமையினில் நிதியாய் வந்தாய்!
...வரமென உன் அபயம் கேட்டேன்!
சிறுமதியன் எனது கீழாம்
...சிறுமைகளை நீக்கி ஆள்வாய்!
நறுமலரில் தொடுத்த மாலை
...நயமுறவே இலங்கு மார்பா!
குறுநகையில் மிளிரும் ஈசா!
...குன்றத்தூர் அமர்ந்த கோவே!

2 comments:

sury siva said...

குன்றத்தூர் சிவபெருமான் மீது இயற்றிய பாடல்கள் பக்தி உணர்வை மேலீட்டச்செய்கின்றன.
மெய் சிலிர்த்துப்போனேன் எனச்சொன்னால் அது மிகையல்ல.

என்னால் இயன்றவரை கானங்களை மோஹன ராகத்தில் பாடியிருக்கிறேன்.
உங்கள் ஓய்வு நேரத்தில்
வரவும். கேட்கவும்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மனமுவந்த
நன்றி!நீங்கள் பாடிய மோகனராகப் பாடலைக்
கேட்டு மகிழ்ந்தேன்!பாராட்டுகள்!நன்றி1

அன்புடன்,
தங்கமணி.