கருவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்
கருவிளம் புளிமாங்கனி
தனதனந் தனதான தனதனந் தனதான
தனதனந் தனதானனா
சதாக்கிர அறுசீர் விருத்தம்
(அடிக்கு 25 எழுத்து, 100 எழுத்து (சதாக்கிரப் பாடல்)
கழைநுழைந் திடுகாலு மினிதெனுஞ் சுவைகூட
..கலைமிகுந் திசையானதே
மழைவருங் குறிகாண மயிலினங் களதாட
..வனமதுங் கவினானதே
புழையறிந் திடயேலா நிழல்மிகுந் ததர்தோன்றும்
..புலமிதென் றறியாமலே
தழைபுனைந் தடர்காவும் அடல்மிகுந் திடுமாவும்
..தருவனந் தகவானதே!
கால் = காற்று, புழை = காட்டுவழி, புலம் = திக்கு, மா = விலங்கு, அதர் = வழி
வயசு கோளாறு
1 year ago
4 comments:
கிட்டத் தட்ட இதே அர்த்தத்தில் குற்றாலக் குறவஞ்சி பாடல் ஒண்ணு வரும், அது நினைவில் வந்தது. நல்லா இலக்கணம் எல்லாம் நினைவு வச்சிருக்கீங்க!s
அன்புள்ள கீதாசாம்பசிவம்!
தமிழ் மரபுக் கவிதை குழுமம்"சந்தவசந்தம்தமிழ்கவிதைகுரூப்"பில்
மூன்றுவருடமாகக் கவிதைகளைப் படித்து மகிழ்ந்தும்,
நானும் எழுதணும் என்னும் ஆர்வத்தோடும்
கற்றுக் கொண்டி(டே யி)ருக்கும் மாணவிதான் நான்.
அன்புச் ச்கோதரர்களின் பாசமுள்ள நட்புணர்வோடுகூடிய,
பொறுமையில் நான் கற்றுவருகிறேன்.
கவிமாமணி.இலந்தை,பேராசிரியர்.பசுபதி,பேராசிரியர்.அனந்த்,கவிஞர்.திரு.ஹரிகி,
கவிஞர்.சௌந்தர்,கவிஞர்.திரு.சிவசிவா,கவிஞர்.நகுபோலியன்
மற்றும் பல அறிஞர்கள் நிறைந்த குழுமம் இது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
பி.கு.எழுபதுகள் ஆரம்பத்தில்(என்30வயதுகளில்)
தேர்வுபெறத் தேவையான அளவு மதிப்பெண்பெற்று
புலவர் பெற்றேன்.
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள அம்மா, உங்கள் கவிதைகளை பலநாட்களாக படித்துவருகிறேன். அற்புதமானவை.
//நானும் எழுதணும் என்னும் ஆர்வத்தோடும்
கற்றுக் கொண்டி(டே யி)ருக்கும் மாணவிதான் நான்.// என்று எழுதியிருக்கும் உங்கள் பெருந்தன்மையை கண்டு வியப்படைகிறேன். நானும் 35 வயதுக்குமேல் தமிழ்மேல் இருந்த பற்றினால் கற்றுவருகிறேன் என்பதால் உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.நன்றி.
//நானும் 35 வயதுக்குமேல் தமிழ்மேல் இருந்த பற்றினால்
கற்றுவருகிறேன் என்பதால் உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன.நன்றி.//
அன்புள்ள உமா!
உன் தமிழ்கற்கும் ஆர்வத்திற்கு மகிழ்கிறேன்!நன்றி!
தமிழில் ஆக்கப் பூர்வமான படைப்புகள் அளிக்க வாழ்த்துகள்!!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment