தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த...தன தான
குழைக ளாட முடிது லங்கு
..குளிர தான நிலவு கங்கை
..குலவ மேனி யிலகு கொன்றை...மலராட
உழுவை ஈரு ரியைய ணிந்து
..உரக மானு முடனி லங்க
..உமையை வாம மிடம ணிந்த... மறையோனே!
முழவி நோடு துடிமு ழங்க
..முடிவி லாத நடமி தென்று
..முதிரு மோன நிலைவி ளங்க...வருவாயே!
விழையு ஞான நிலைது லங்க
..விமல நாகி மருளு கின்ற
..வினையு மோட அபய மொன்றை...அருளாயோ!
வயசு கோளாறு
10 months ago
2 comments:
சிவதரிசனம் கிடைத்தது உன் பாடலில்....நன்றாக இருக்கிறது.
உழுவை.....உரக மானும்...எனக்கு புரியவில்லை.என்ன அர்த்தம் சொல்லுவாயா?
அன்பு உமா!
உழுவை=புலி,உழுவை ஈருரியை யணிந்து=புலித் தோலையணிந்து,
உரகம்=பாம்பு(உரக சயனன் என்று திருமாலைச் சொல்லுவர்)
உரகமும் மானும் என்றிருக்க வேண்டும்.உரக,மானும் என்பது
சரியோ தெரியவில்லை.கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment