ஆங்கிலத்தில் PANTOUM என்னும் பாடல்வகை
திரு.இலந்தை அவர்கள்'பாண்டி'என்னும் பெயரால் கொடுத்த பயிற்சிப் பாடலை
ஒட்டி நான் எழுதியது.)
தோயும் அன்பில் துன்பம் நீங்கும்!
காயின் புளிப்பு கனியில் தீரும்
வேயின் இசையில் விழிகள் அரும்பும்
நேயம் பண்பின் நியதி சுட்டும்
கோயில் உயர்வில் கூடும் பணிவு
வேயின் இசையில் விழிகள் அரும்பும்
சேயின் மழலை சிந்தும் இனிமை
கோயில் உயர்வில் கூடும் பணிவு
ஓயும் அலையும் உண்டோ கடலில்
சேயின் மழலை சிந்தும் இனிமை
தாயின் அருமை தளிரின் தவிப்பில்
ஓயும் அலையும் உண்டோ கடலில்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை
தாயின் அருமை தளிரின் தவிப்பில்
காயின் புளிப்பு கனியில் தீரும்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை
தோயும் அன்பில் துன்பம் நீங்கும்
வயசு கோளாறு
1 year ago
4 comments:
சுவையாக இருக்கு!
//தோயும் அன்பில் துன்பம் நீங்கும் //
உண்மை அம்மா, அன்பில் மனம் தோய்ந்தால் துன்பம் ஏது? அருமையான கவிதை!
நன்றி திவா!
அன்புடன்,
தங்கமணி.
கீதா சாம்பசிவம்!
பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment