எனதுயிர் தெய்வம் செவ்வேள் எழில்வேலன் என்றே
...இளமஞ்ஞை மீது வருவாய்!
மனதிருள் நீக்கும் தேசாய் வினையாவும் வேலால்
...விரைவாகப் போக்கி அருள்வாய்!
கனவெனும் வாழ்வைக் கண்டு கலங்காத சித்தம்
...கனிவான பக்தி தருவாய்!
நினதிரு பாதம் போற்றி நெறியாகக் கூட்டும்
...நிறைஞான வாழ்வை விழைந்தேன்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
//கனவெனும் வாழ்வைக் கண்டு கலங்காத சித்தம்
...கனிவான பக்தி தருவாய்!
நினதிரு பாதம் போற்றி நெறியாகக் கூட்டும்
...நிறைஞான வாழ்வை விழைந்தேன்! //
அருமையான, எளிமையான வேண்டுதல் அம்மா. அனைவருக்கும் தேவையானதும் கூட.
நன்றி!கீதா!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment