Sunday, July 15, 2012

திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி-- 3

நாகா பரணமணி நாதன் தன்னை
...நயமாய்ப் பொற்சபையில்  நடம்செய் வானை
வாகா யுமையம்மை வாமத் தானை
...வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப்
...பாட்டால் பரவுமன்பர் பற்றும் கோனை
சேகார் நிறச்சடையன்  திங்கள் சூடும்
...திருமாற்பேற்  றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே.... 5


சேகு=செம்மை
தாய்வழியில் வெள்ளத்தால் தவித்து நிற்கத்
...தாயாகப் பெண்ணைவந்து காத்தான் தன்னைப்
பேய்வடிவ அன்னையினைப் பெற்றான் தன்னைப்
...பித்தனென்ற சுந்தரர்க்குத் தூதா .னானைக்
காய்வினையைத் தீர்க்கின்ற  கழலன் தன்னைக்
...கரியுரியை உடுத்தவனைக் கதியா வானைச்
சேய்மையனாய் அண்மையனாய்த் திகழ்கின் றானைத்
...திருமாற்பேற் றரன் தன்னைச் சிந்தி நெஞ்சே....6 

2 comments:

Geetha Sambasivam said...

வருத்து மூழ்வினையை மாற்று வானைப்
பாகா யினிக்கின்ற பரனின் பேரைப் //

அருமையான கருத்து அம்மா. வருத்தும் ஊழ்வினையை அவனைத் தவிர யாரோ மாற்ற வல்லவர்.

Thangamani said...

ஆமாம் கீதா இறைவன் தான் மாற்றணும்.