Tuesday, July 31, 2012

திருவேடகம் ---1

திருவேடகம்
-----------------
(திருமுக்கால் அமைப்பில்.
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா) 


பற்றன லிலேடதும் பசுமையாம் ஏடகப்
புற்றர வினையணி வீரே
புற்றர வினையணி வீருமைப் புகலென
உற்றவர் உறுவதும் உய்வே....1

(பற்றும் அனலில் ஏடதும் பசுமையாம்.)

அலைபுனல் எதிர்த்தெழு அந்தமிழ் ஏடக
கலைமதி புனைசடை யீரே
கலைமதி புனைசடை யீருமை வணங்கிட
இலையென விலகிடும் இடரே....2


வையையி லேடெதிர் வந்தடை ஏடக
மெய்யணி வெண்பொடி யீரே
மெய்யணி வெண்பொடி யீருமை நினைபவர்
வெய்யவல் வினைத்தளை விடுமே.


ஆற்றிலி டருந்தமிழ் அவையடை ஏடக
நீற்றினைப் புனைநுத லீரே
நீற்றினைப் புனைநுத லீரும தலர்க்கழல்
ஏற்றிட நிறைந்திடும் இனிதே....4


தெறிபுனல் எதிரெழு செந்தமிழ் ஏடக
வெறிமலர் புனைசடை யீரே
வெறிமலர் புனைசடை யீருமை நினைபவர்
நெறிதனில் அடைவதும்  நிறைவே....5


1 comment:

Geetha Sambasivam said...

திருவேடகத்தில் வைகை கொஞ்சம் வேகமாகவே செல்லும். இப்போ எப்படியோ! ஒரு முறை மழைக்காலத்தில் போய்ப்பார்க்கணும். :)