விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3
விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்
விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4
அண்ணுதல்= நெருங்குதல்.
வயசு கோளாறு
1 year ago
3 comments:
முதல் பாடல் திரிபுரங்களைக்குறிக்கிறதா? எயில் என்பது கோட்டை தானே?
ஆமாம்.எயில் என்பது கோட்டை.
முப்புரங்களை எரித்ததைத்தான் குறிக்கிறது.
நன்றி கீதா!
ஆமாம்.எயில் என்பது கோட்டை.
முப்புரங்களை எரித்ததைத்தான் குறிக்கிறது.
நன்றி கீதா!
Post a Comment